மத்திய அமைச்சரவையில் மாற்றம்? – தெலுங்கானா பாஜக தலைவராக மத்திய அமைச்சர் நியமனம்
Share
மத்திய அமைச்சரான கிஷண் ரெட்டி தெலுங்கானா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் கிஷண் ரெட்டி. இவர் தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜஹரும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பாபுலால் மரன்டியும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்தியஅமைச்சர் புரந்தேஸ்வரி ஆந்திர மாநில பாஜக தலைவராக நியமித்து பாஜக மத்திய தலைமை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சரான கிஷண் ரெட்டிக்கு தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் அவர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி சுமையை குறைக்க கிஷண் ரெட்டி அமைச்ர் பதவியில் இருந்து விலக்கப்படலாம் எனவும் அவருக்கு பதில் புதிய அமைச்சர் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.













