LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும் – அண்ணாமலை பேட்டி

Share

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, ஆளுநர் அரசை விமர்சிப்பது மரபு அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதவது: ஆளுநர் அரசியல் பேசக்கூடது என்பதே எங்கள் நிலைப்பாடு, ஆளுநர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவதே தவறு, ஆளுநர் தனது கடமையை மட்டுமே பேசவேண்டும். ஆளுநர் அரசை விமர்சிப்பது மரபு அல்ல, எங்களுக்கு ஆதாயம் இருந்தாலும் விமர்சிப்பது சரியல்ல” என்றார். தெலுங்கானா ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது குறித்த கேள்விக்கு அண்ணாமலை இவ்வாறு பேசியுள்ளார்.