தென்காசியில் உணவு நடமாடும் வாகனம் – ஆட்சியர் துவக்கி வைத்தார்!
Share
தென்காசி மாவட்டத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வகம், வாகனம் மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். இவ்வாகனமானது பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்த உள்ளது. இவ்வாகனத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது அவர்களிடையே நல்ல சுகாதாரமான சத்தான உணவினை உட்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமையும். இவ்வாகனமானது திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி. தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட பயன்பாட்டிற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒரு மாத காலத்திற்கு தென்காசி மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ள இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.













