புதுமண தம்பதியர் தலையை முட்ட வைத்தவர் அதிரடி கைது!
Share
கேரளாவில் திருமண சடங்கு என்ற பெயரில் புதுமண தம்பதியினரின் தலையை முட்ட வைத்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் சச்சின் – சஜ்லா தம்பதியினர். புதுமண தம்பதியான இவர்கள் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு சென்றபோது, மணமகனின் உறவினர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட வைத்துள்ளார். இதில் வலி தாங்க முடியாத மணப்பெண் அழுதுக்கொண்டே மணமகன் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இந்த காணொலி இணையத்தில் வைரலான நிலையில் தாமாக முன்வந்து புகார் அளித்த மகளிர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் பெண்மையை அவமதித்ததாகவும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொல்லை கொடுத்ததாகவும் மணமகனின் உறவினர் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.













