தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் மனு
Share
எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல் அமைச்சராகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். அஜித் பவார் தரப்பினர் எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இந்தக் கூட்டம் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள புஜ்பால் நாலேஜ் சிட்டி அரங்கில் நடந்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பினர் மனு அளித்துள்ளார். இதேபோல், சரத் பவார் தரப்பில் இருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.













