LOADING

Type to search

இந்திய அரசியல்

செங்கோட்டை பகுதில் பருவ மழை தீவிரம்; குளம் உடைந்து தண்ணீர் வெளியேறியது

Share

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரைகுளம் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக கரையில் உடைப்பு ஏற்பட்டு குளத்தின் தண்ணீர் அனைத்தும் வெளியேறியது.

செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ளது மேக்கரைக்குளம் இந்த குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் இந்த குளத்தின் கரையானது வெள்ளத்தால் உடைந்து தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. மேலும் அடவிநயினார் அணைக்கு செல்லும் பிரதான சாலையின் கற்கள் பெயர்ந்து வயல்வெளிகளில் நிரம்பி உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் சேதமடைந்து இருந்துவருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னா் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வெள்ளத்தால் உடைந்து போன குளத்தின் கரை மற்றும் பெயர்ந்து போன சாலைகளை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு செப்பனிட அறிவுறுத்தினார்.