LOADING

Type to search

இந்திய அரசியல்

“குப்பை இல்லா குமரி” விழிப்புணர்வு நடை பயணத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

Share

கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அமைச்சர்
மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வீடுகளில் உறிஞ்சி குழாய் திட்டம், கழிவுகளை குழாய் வழி உரமாக்கல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சென்று குப்பையில்லா குமரியாக மாற்றுவதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதேபோன்று குப்பை இல்லா குமரி என்ற விழிப்புணர்வு நடைபயணம் குலசேகரத்தில் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் காலை 7 மணிக்கு நடைபயணம் தொடங்கியது. இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து வழிநடத்தி சென்றார். சப் கலெக்டர் கௌசிக் முன்னிலை வைத்தார். நடைபயணம் குலசேகரம் அரசு மருத்துவமனை சாலை, அரசமூடு, செட்டி தெரு, காவஸ்தலம், குலசேகரம் சந்தை, செருப்பாலூர், தெங்குவிளை, இட்டகவேலி, புலியிறங்கி வழியாக கல்லடி மாமூடு சந்திப்பில் நிறைவடைந்தது.

இந்த நடை பயணத்தில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர் சமூக அமைப்புகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையிலும் குப்பையில்லா குமரி என்ற கோஷத்துடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண்ணம் நடந்து சென்றனர். நடைப்பயண பாதையில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த உறிஞ்சி குழாய் திட்டங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்.