பெற்ற மகளை வாலிபருக்கு விருந்தாக்கிய தாய் கைது
Share
தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு அனைத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வாலிபர், அவரது காதலி மற்றும் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகியோரை திருவனந்தபுரம் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்தவர்
அகில்தேவ்(வயது 25) இவர் அதே பகுதியை சேர்ந்த வினீஷா(24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நன்றாக பேசி பழகி இருவரும் காதல் வயப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அகில் தேவும், வினீஷாவும் மதுரைக்கு சென்று விட்டு ரயிலில் திருவனந்தபுரத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ரயிலில் வைத்து 13 வயது மகளுடன் திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த இளம் பெண்ணும், அகில்தேவும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு அகில்தேவ் உன்னையும், உனது மகளையும் பார்க்க வேண்டும் என்று
ஆவலாக உள்ளது எனவே உன் மகளை அழைத்துக் கொண்டு கொச்சிக்கு வருமாறு கூறியுள்ளார். இதன்படி இளம் பெண்ணும் தனது மகளுடன் கொச்சிக்கு சென்றார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தயாராக இருந்த அகில்தேவ் தன்னை சந்திக்க ஓட்டலுக்கு வருமாறு கூறினார்.
இதையடுத்து இளம் பெண்ணும் அவரது மகளும் அங்கு சென்றனர்.
அப்போது 3 பேரும் ஓட்டல் அறைக்குள் இருந்து நீண்ட நேரம் பேசினர். பின்னர் திடீரென்று இளம் பெண் தனது மகளை அகில்தேவுடன் தனியாக விட்டு விட்டு அறையை விட்டு வெளியேறினார் அப்போது சிறுமி என்றும் பாராமல் அகில்தேவ் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து கதறி அழுதபடியே அறையை விட்டு வெளியே வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை தாயிடம் கூறினார். ஆனால், அவர் உன்னை அகில்தேவிடம் உல்லாசமாக இருக்கவே அழைத்து வந்தேன். அதற்காக ஆயிரக்கணக்கில் அகில்தேவ் எனக்கு பணம் கொடுத்து விட்டதாக கூறினார்.
பெற்ற தாயே தன்னை இப்படி நாசம் செய்ததை அறிந்து சிறுமி அதிர்ச்சி அடைந்தார். ஆனால், அகில்தேவ் இதோடு நில்லாமல் அந்த சிறுமியை தன்னுடைய காதலியான வினீஷாவின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த வினீஷாவின் பெற்றோர் அகில்தேவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தனர். இதனால் நைசாக காட்டாக்கடை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளித்தனர்.
இதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அகில்தேவிடம் விசாரணை நடத்திய போது தான், சிறுமிக்கு நடந்த கொடூரம் வெட்ட வெளிச்சமானது.
இதைய டுத்து சிறுமியை பலாத்காரம் செய்த அகில்தேவ், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் மற்றும் அகில்தேவின் காதலியான வினீஷாவையும் சேர்த்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.













