பெரிய பாடகியாக மாற்றுவதாக கூறி சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த நபர் கைது
Share
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கூட்டிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜீமோன்(வயது 42) இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவரை நிறைய பேர் பாலோ செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த ஒரு கண் பார்வை சற்று குறைந்த 17 வயதான சிறுமி ஒருவர் சமீபத்தில், தான் பாடிய சில பாடல்களை யூடியூபில் வெளியிட்டிருந்தார். இந்த பாடல்கள் ஜீமோனை கவர்ந்து விட்டது. உடனடியாக ஜீமோன் அந்த சிறுமியை தொடர்பு கொண்டார். பின்னர் சிறுமியிடம் நன்கு பேசி பழகிய ஜீமோன், நீ பாடும் பாடல்களை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கித் தருவதாக சிறுமியிடம் கூறியுள்ளார். அதை அந்த சிறுமியும் நம்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சிறுமியை போனில் அழைத்துள்ள ஜீமோன் ஒரு ஓட்டலுக்கு வந்தால் பாடல்களை பதிவு செய்யலாம் உன்னை பிரபல பாடகியாக மாற்றுகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதன்படி அந்த சிறுமி ஜீ மோன் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு வைத்து அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் கொச்சி முனம்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ஜீமோனை கைது செய்தனர்.













