தமிழ்நாடு முழுவதும் 3010 புதிய குடியிருப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Share
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில் சந்தோஷ் நகர் பகுதி 1 திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தூண் மற்றும் 14 தளங்களுடன் 57 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 410 புதிய குடியிருப்புகள், சந்தோஷ் நகர் பகுதி 2 தூண் மற்றும் 14 தளங்களுடன் 20 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் 150 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி 1 திட்டப்பகுதியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 94 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் 648 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி 2 தூண் மற்றும் 11 தளங்களுடன் 57 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவில் 396 புதிய குடியிருப்புகள்; செங்கல்பட்டு மாவட்டம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதியில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள், காயரம்பேடு திட்டப்பகுதியில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள், பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 7 தளங்களுடன் 480 புதிய குடியிருப்புகள்.
வேலூர் மாவட்டம், பத்தலபல்லி திட்டப்பகுதியில் 304 அடுக்குமாடி குடியிருப்புகள், தருமபுரி மாவட்டம், மோலையானூர் திட்டப்பகுதியில் 2 தளங்களுடன் 192 அடுக்குமாடி குடியிருப்புகள், தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி தரைத்தள இரட்டை குடியிருப்புகள் 110 குடியிருப்புகள், கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்தி மங்கலம் திட்டப்பகுதியில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 358 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3,010 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்து, இக்குடியிருப்பிற்கான 902 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்கினார்.













