LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவில் பக்கத்து வீட்டு குளியலறையில் தூக்கில் பிணமாகத் தொங்கிய இளம் பெண்

Share

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நாதாபுரம் கூடஞ்சேரி பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஒருவர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின்புறம் கிணறு உள்ளது. இதையொட்டி குளியலறை தனியாக இருக்கிறது.

இரவில் குளியலறையின் கதவை பூட்டி வைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆசிரியரின் மனைவி வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு சென்றார். அப்போது அங்கு கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தூங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாதாபுரம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் குளியலறையில் தூக்கிட்டு இறந்த பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுபி என்பவரது மனைவி அஸ்வதி(25) என்பது தெரிய வந்தது.

அஸ்வதி தங்கியிருக்கும் வீட்டுக்கும் ஆசிரியரின் வீட்டுக்கும் இடையே காம்பவுண்டு சுவர் சிறியதாக உள்ளது. இதனால் இரவில் அஸ்வதி ஆசிரியர் வீட்டு குளியல் அறைக்கு சென்று தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரும் அவரை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.