“வெற்றி நிச்சயம்; வெண்ணிலா சத்தியம்” -சந்திரயான் 3 வெற்றி குறித்து கவிஞர் வைரமுத்து
Share
சந்திரயான் 3 வெற்றி குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள முகநூல் பதிவு வருமாறு:-
“சந்திரயான் 3
விண்ணில்
நிலைநிறுத்தப்பட்டதில்
இந்திய விஞ்ஞானிகளை
அண்ணாந்து பார்க்கிறது,
அகிலம்.
ஆகஸ்டு 23
அது தடுமாறாமல்
தடம் மாறாமல்
நிலாத் தரையில்
இயங்க வேண்டும்.
உலகத்தின் கண்கள்
குவிய வேண்டும்,
நிலாவின் மீதும்
இந்தியா மீதும்.
வெற்றி நிச்சயம்
வெண்ணிலா சத்தியம்.”
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.













