LOADING

Type to search

இந்திய அரசியல்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி யாத்திரையைத் தொடங்கிய வானதிஸ்ரீனிவாசன்

Share

கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாலை அணிந்து, இருமுடி கட்டி சபரிமலை பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாலை அணிந்துள்ளார். மேலும் அவர் விரதம் இருந்து, இன்று வடகோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தி பாடல்கள் முழங்க இருமுடி கட்டினார்.

இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். அவருடன் சிறுவர், சிறுமிகள் உட்பட 10 பேர் சபரிமலை யாத்திரைக்கு செல்கின்றனர். இந்த நிலையில் அவரை வழிய அனுப்பி வைக்க அவரது பூஜைக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்த அவரது கீச்சக பதிவில், ‘வடகோவை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டோம். இப்புனித பயணத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையனின் குடும்பத்தாரும், கொங்குநாடு கல்லூரியின் தலைவர் வாசுகியும் கலந்துகொண்டனர். சுவாமியே சரணம் ஐயப்பா’என்று குறிப்பிட்டுள்ளார்.