LOADING

Type to search

இந்திய அரசியல்

பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி நடிகர் சூர்யா ரசிகர்கள் 2 பேர் பலி

Share

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசாராவ்பேட்டை மண்டலத்தில் உள்ள யாக்களவாரி பாளையம் கிராமத்தில் நேற்று  அதிகாலை அவருடைய ரசிகர்கள் சூர்யாவின் பேனர்களை கட்டி கொண்டிருந்தனர்.

அப்போது பேனர் இரும்பு கம்பி என்பதால் அருகிலிருந்த மின்சார வயர் மீது எதிர்பாராத விதமாக உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் வெங்கடேஷ் (வயது 19), சாய் (20) ஆகிய ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.