LOADING

Type to search

இந்திய அரசியல்

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

Share

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. காலை தீப்பெட்டி ஆலையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. காலை என்பதால் பணியாளர்கள் யாரும் வரவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.