கடன் வசூலில் மனிதாபிமானம் தேவை – வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Share
வாடிக்கையாளர்களிடம் கடன் வசூல் செய்யும் போது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் சிவசேனா கட்சி எம்.பி. சாம்பாஜிராவ் மானே, வங்கிக் கடன் வசூல் அணுகுமுறை குறித்து ஒரு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து, நிர்மலா சீதாராமன் பேசியதாவது: அனைத்து பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் கடன் வசூலில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. வங்கிகள் கடன் வசூலில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.













