LOADING

Type to search

இந்திய அரசியல்

ரூ.5600 கோடி முறைகேடு ஆவணங்களுடன் ஆளுனருடன் அண்ணாமலை சந்திப்பு

Share

ரூ. 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை ஆளுனரிடம் வழங்கியுள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியை சந்தித்தோம். ஆளுனரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.