LOADING

Type to search

இந்திய அரசியல்

சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது – சட்டசபை செயலாளர்

Share

சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: சட்டசபை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து சபை நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.