LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆஸ்கர் வென்ற மேக்கப் ஆர்டிஸ்டுடன் மீண்டும் இணைந்த கமல்

Share

எண்ணூர் பகுதியை சேர்ந்த காட்டுக்குப்பம், சின்ன குப்பம் பெரியகுப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் எண்ணூர் குப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிக்கு கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மீனவ கிராம மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகளில் கொசஸ்தலை ஆற்றில் சென்று மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து முற்றுகையிட்டனர். மீன்பீடி தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீன் இனப்பெருக்க வளம் பாதிக்கும் என்று குற்றம்சாட்டினர். அவர்களிடம் தாசில்தார் செல்வகுமார் மற்றும் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.