LOADING

Type to search

இந்திய அரசியல்

80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைத்த அண்ணா பல்கலை

Share

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், தமிழ்நாட்டில் 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திவைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும், அதன் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதிபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை முறையாக செயல்படுத்தாதன் காரணமாக, தமிழ்நாட்டில் 80 பொறியியல் கல்லூரிகள் தொடர்ந்து செயல்பட முடியாத அளவிற்கு அவற்றுக்கு அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திவைத்துள்ளது. இந்த கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த 80 பொறியியல் கல்லூரிகளிலும் நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அப்போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள் உள்ளனரா? மற்றும் ஆய்வகங்கள், நூலகங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.