திருவண்ணாமலையில் காவல்துறை பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச்செல்லப்பட்ட ஆதிதிராவிட மக்கள்
Share
திருவண்ணாமலை அருகே கிராமத்தின் மையத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு பல ஆண்டுகளாக செல்ல முடியாமல் இருந்த ஆதி திராவிட மக்கள், காவல்துறை, வருவாய்த்துறை உதவியோடு கோயிலுக்கு சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலில் ஊர் மக்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த செந்தமிழ் என்பவருக்கும், தங்கராசு என்பவருக்கும் இடையே கோயிலுக்குள் செல்வது குறித்து கடந்த மாதம் முகநூலில் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பாக மாறியது. தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிட மக்கள், மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக வந்து கோயிலுக்குள் நுழைந்தனர். பின்னர் பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.













