LOADING

Type to search

சினிமா

பிரபல திரைப்பட கலை இயக்குநர் தற்கொலை – அதிர்ச்சியில் திரைத்துரையினர்!

Share

பிரபல இந்தி திரைப்பட கலை இயக்குநர் நிதின் சந்திரகாந்த் தேசாய் மகாராஷ்டிரா மாநிலம் கர்ஜத்தில் தனது ஸ்டுடியோவில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தி திரையுலகில் கலை இயக்குநர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக இருந்த நிதின் சந்திரகாந்த், பல வெற்றிப்படங்களில் செட் அமைத்துப் புகழ்பெற்றார். ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லினியர் படத்திலும் நிதின் சந்திரகாந்த் பணியாற்றியுள்ளார். 1942, தேவ்தாஸ், முன்னா பாய் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அவரின் கலைநயமிக்க செட்கள் தேசிய அளவில் கவனம் பெற்றவையாகும். லகான், தேவ்தாஸ் படங்கள் உட்பட அவர் 4 தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார்.

58 வயதான நிதின், கே.டி என்ற பெயரில் ஸ்டுடியோவையும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கர்ஜத் பகுதியில் தொடங்கியிருந்தார். ஜோதா அக்பர், டிராபிக் சிக்னல், ஹம் தில் சுக்கே சனம் உள்ளிட்ட படங்களுக்கு இந்த ஸ்டுடியோவில்தான் செட்கள் அமைக்கப்பட்டன. வரலாற்றுப் படங்களுக்கு செட் அமைப்பதில் கைதேர்ந்த கலைஞரான நிதினின் மறைவு பாலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.