LOADING

Type to search

இந்திய அரசியல்

மதுரை ரெயில் தீ விபத்து – சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு

Share

உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் அதிகாலை மதுரை ரெயில் நிலையம் அருகே எரிவாயு உருளை வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு எரிவாயு உருளை வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரெயில் தீவிபத்து தொடர்பாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் மீது தென்னக ரெயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.