காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் ரூ.6 கோடி சொத்துகள் முடக்கம்!
Share
பஞ்சாப் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பாரத் பூஷன் ஆஷு மற்றும் சிலருக்கு எதிரான ஒப்பந்த புள்ளி முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கினை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பஞ்சாபில் பாரத் பூஷண் ஆஷுக்கு தொடர்புடைய 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து ஆஷூவின் ரூ.6 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது, அவர் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக உள்ளார்.













