வங்கிகளில் கவனத்தை திசை திருப்பி பணம் திருட்டு
Share
வங்கிகளில் கவனத்தை திசை திருப்பி பணம் திருட்டு சம்பவம் நடந்து வருவதால், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கி உள்ளே பணத்தை எண்ணிக்கொண்டிருந்த நபரின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை வங்கி அதிகாரிகள் மேற்க்கோள் காட்டி அறிவுரை வழங்கி உள்ளனர்.
இதுவரை வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை பின் தொடரும் மர்ம நபர்கள், அவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை திருடி சென்றனர். வங்கி வளாகத்தில் காவலாளிகள் உள்ளதால், அங்கு பாதுகாப்பு இருந்தது. இதனால், மக்கள் வங்கி உள்ளே பணம் செலுத்தும்போதும், எடுக்கும் போதும் அங்கேயே எண்ணி வந்தனர். தற்போது, வங்கி வளாகத்திற்குள் மக்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இதனால், வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், எந்த நேரத்திலும் கவனத்தை சிதற விடாமல் இருப்பது அவசியம்.













