ஒகேனக்கல் காவேரியில் பரிசல் இயக்க அனுமதி
Share
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,000 கன அடியாக குறைந்துள்ளதால், காவேரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.













