தமிழ்நாடு தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் யாகங்கள் 06.09.2023 அன்று நடைபெறுகின்றன
Share
தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் யாகங்கள் செப்டம்பர் 6 முதல் நடைபெறுகிறது
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை வட்டம், கீழ்புதுப்பேட்டை அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 06.09.2023 அன்று புதன்கிழமை மாலை 4.00 மணி அளவில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஹோமமும் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் வெண்ணெய் சாற்றி வழிபாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்த அவல், சீடை, முறுக்கு போன்ற பல்வேறு வகையான பலகாரங்கள் வைத்து நிவேதனம் செய்யப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பதினாறும் பெற்று ஆனந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
இதனைத் தொடர்ந்து 07.09.2023 வியாழக்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட கால மகா பைரவர் ஹோமமும், சொர்ண கால பைரவர் பூஜையும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
08.09.2023 வெள்ளிக்கிழமை அன்று நவமி தேதியில் சர்வ மங்களங்களை தரும் மங்கள சண்டி யாகம் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.













