LOADING

Type to search

இந்திய அரசியல்

பல்லடம் அருகே 4 பேர் படுகொலை – பதற்றம் நீடிப்பு

Share

பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களின் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்லடம் அருகே 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனை தற்போது நிறைவு பெற்றது.

முதலில் அவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புக் கொண்டனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து 4 பேரின் உடல்களையும் வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பாஜகவினர் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறையும் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.