LOADING

Type to search

இந்திய அரசியல்

நிலவில் சென்ற விக்ரம் லேண்டர்.. இஸ்ரோ அறிவிப்பு

Share

நிலவில் ரோவரை தொடர்ந்து லேண்டரும் நித்திரை நிலைக்கு செல்வதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்கு கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 23 ஆம் தேதி, திட்டமிட்டப்படி சந்திரயானை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி விஞ்ஞானிகள் சாதித்தனர். நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பல்வேறு பிரத்யேக தகவல்களை பூமிக்கு அனுப்பியது. கடந்த சனிக்கிழமை, நிலவில் பகல் முடிந்து இரவு தொடங்கியதால், பிரக்யான் ரோவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

இதன் நீட்சியாக நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் முதன் முறையாக நகர்த்தப்பட்டது. அது தரையிறங்கிய இடத்தில் இருந்து 40 சென்டிமீட்டர் உயரம் வரை பறந்து, 30 முதல் 40 சென்டிமீட்டர் தூரத்தில் உள்ள வேறு இடத்திற்கு பாதுகாப்பாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், காலை 8 மணிக்கு லேண்டரும் நித்திரை நிலைக்கு அனுப்பப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதில் உள்ள அனைத்து தரவுகளும் பூமிக்கு அனுப்பப்பட்ட நிலையில், சூரிய ஆற்றல் குறைந்து, பேட்டரி தீர்ந்த பிறகு, லேண்டரும் நித்திரைக் கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வரும் 22 ஆம் தேதி நிலவில் சூரிய ஒளிபட்டு, விக்ரம் லேண்டர் விழிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.