சனாதானம் குறித்து நான் பேசியதில் தவறில்லை: “பேசக்கூடாது என்றால் திரும்பத் திரும்பப் பேசுவேன்” அமைச்சர் உதயநிதி பேட்டி
Share
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (செப் 4) தூத்துக்குடி விமான நிலையம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
“சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை. நான் பேசியதில் தவறு இல்லாத போது எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்?
சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தார்கள். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. திராவிட மாடலில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது.
சனாதனத்தில் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். படிக்க அனுப்ப வில்லை. சனாதனம் பற்றி பேசக் கூடாது என்றால் திரும்பத்திரும்ப நான் பேசுவேன். நான் பேசினால் பலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படும் என பேசும்போதே கூறினேன்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.













