LOADING

Type to search

சினிமா

விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி – விஜய்யின் அடுத்த உத்தரவு?

Share

விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தை நடத்த நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் சனிக்கிழமை விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த நடிகர் விஜய் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு உத்தரவிட்டு உள்ளார்.

அதில் விஜய் மக்கள் இயக்கத்தை பெண்கள் மத்தியிலும் குடும்பங்களின் மத்தியில் கொண்டு செல்வதற்கு குறித்து ஆலோசனை நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த அமைப்பில் உள்ள 10 அணிகளின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். அதன்படி இந்த ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது மகளிர் அணி கூட்டத்தில் சில முக்கிய விஷயங்களை விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.