”நலமுடன் இருக்கிறேன்” – நடிகை திவ்யா ஸ்பந்தனா விளக்கம்
Share
தான் நலமுடன் இருப்பதாக நடிகை திவ்யா ஸ்பந்தனா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் வெங்கடேஷ் இயக்கத்தில் குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா. அர்ஜுனுடன் கிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
ஏராளமான கன்னட படங்களில் நடித்துவரும் ரம்யா, காங்கிரஸில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக வதந்தி வேகமாக பரவியது. இணையத்தில் பலரும் இந்த தகவலை உறுதிப்படுத்தாமல் செய்த நிலையில், தான் நலமுடன் இருப்பதாக நடிகை திவ்யா ஸ்பந்தனா விளக்கம் அளித்துள்ளார். தான் தற்போது ஜெனீவாவில் நலமுடன் இருக்கிறேன் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.













