LOADING

Type to search

இந்திய அரசியல்

மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல்? – அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் முக்கிய அறிவுரை

Share

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மதுரை மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மதுரை மாநாட்டிற்கு பிறகு அதிமுக எழுச்சி பெற்றுள்ளதாகக் கூறினார்.

தற்போது அதிமுக ஒரே தலைமையின் கீழ் வந்துவிட்டதாகக் கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது, அதிமுக அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இதில், புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். வரும் தேர்தலில் வெற்றி பெற சிறப்பாக உழைக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.