LOADING

Type to search

இந்திய அரசியல்

புதுவை மாதா தேவாலயத்தில் தேர் பவனி கோலாகலம்

Share

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நவநாள் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்படி புதுச்சேரியிலும் மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மிஷின் விதியில் உள்ள பழமை வாய்ந்த ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. அதில் பங்குதந்தை ரோசாரியோ தலைமையில் மாதாவின் பாடல்களை இசைத்தவாரே தேர்பனி சென்றது. இந்நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று மாதாவை வழிப்பட்டனர்.