LOADING

Type to search

சினிமா

முகேன் ராவ், பிரீத்தி அஸ்ராணி நடிக்கும் திரைப்படம் “நிறம்”

Share

முகேன் ராவ், பிரீத்தி அஸ்ராணி நடிக்கும் திரைப்படம் “நிறம்”. கே.பிந்துமாதவி தயாரிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் முகேன் ராவ், பிரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப், சுரேகா வாணி, கஜராஜ், நிதின் சத்யா, சுரேஷ் சக்கரவர்த்தி, அன்பு மயில்சாமி, சினேகா குப்தா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நிறம்”. இடத்துக்கு தக்கவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி குணம் படைத்த மனிதர்களைப் பற்றி இயக்குநர் விவரிக்கும் படம். முகேஷ் ராவும் அஸ்ராணியும் மருத்துவர்கள். இருவரும் காதலர்கள். அந்த மருத்துவமனையில் நடக்கும் ஒரு குற்றச் செயலை கண்டுபிடிக்கிறார் அஸ்ராணி. அதனால் அவர் கடத்தப்படுகிறார். காவலர்கள் முகேன்ராவ் மீது சந்தேகப்பட்டு சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் அவர் சிறையிலிருந்து தப்பித்து காதலி அஸ்ராணியை தேட ஆரம்பிக்கிறார். அதே நேரத்தில் அந்த மருத்துவமனையின் நிர்வாகியாக இருக்கும் சுரேகா வாணியின் மகள் தானியா ஹோப்பும் கடத்தப்படுகிறார். அவர்களை கடத்தியது யார்? எதற்காக கடத்தப்படுகிறார்கள்? கடத்தப்பட்ட இருவரும் என்ன ஆனார்கள்? எனதுதான் மீதிக்கதை. முகேன் ராவ் தனது இயல்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். காதல் காட்சிகளில் இன்னும் சற்று கவனம் செலுத்தி படக்காட்சிகளை அமைத்திருந்தால் முகேன் ராவ் அந்த இடத்தை பூர்த்தி செய்திருப்பார். அஸ்ராணியின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை இயக்குநர் படம்பிடித்துக் காட்டியுள்ளார். நடிகைகளில் ப்ரீத்தி அஸ்ராணி அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார். தான்யா ஹோப் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். நிதின் சத்யாவின் வில்லத்தனம் பெரிதாக எடுபடவில்லை என்றாலும் தனக்கு கொடுத்த பாத்திரத்தை நிரப்பியுள்ளார். இசையமைப்பாளர் டி.இமானின் இசை படத்துக்கு பக்கபலமாகிருக்கிறது. ஒரே நேர்கோட்டில் கதை சொல்லாவிட்டாலும் பல கோடுகளை ஒன்றிணைக்கும் வித்தை திரைக்கதையில் வைத்து ஒரேபுள்ளியில் இணைத்திருக்கிறார் இயக்குநர் பலராம் கிருஷ்ணா. ஒரு பரபரப்பாக திரைக்கதை அமைந்திருக்கிறது. நல்லவர்கள் தீமையைக் கண்டு ஒதுங்குவது தான் சமூகத்திற்கு ஆபத்து என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் பலராம் கிருஷ்ணா பாராட்டுதலுக்குரியவர்.