LOADING

Type to search

சினிமா

நானி இயக்கத்தில் லியோ சிவகுமார் நடிக்கும் “டெலிவரி பாய்” திரைப்படம்

Share

 நானி இயக்கத்தில் லியோ சிவகுமார் நடிக்கும் “டெலிவரி பாய்” திரைப்படம். அமுதா லியோனி, லெனின் மாதேஸ்வரன் ஆகியோரின் தயாரிப்பில், நானி இயக்கத்தில் ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார், பிரிகிடா சகா, காளி வெங்கட், ஜென்சன் திவாஹர், போஸ் வெங்கட், துஷ்யானந், உதயாதீப்  ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘டெலிவரி பாய்’ .காவல்த்துறையில் பணியாற்ற வேண்டுமென்ற ஆசையில் இருக்கும் லியோ சிவகுமார், தற்காலிகமாக வீட்டுக்கு வீடு உணவு விநியோகித்து வருகிறார். அத்துடன் பக்கத்துவீட்டு பிரிகிடா சாகாவையும் காதலிக்கிறார். அம்மா ராதிகாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அம்மாவை காப்பாற்ற மருத்துவ செலவுக்கு ரூ.2லட்சம் தேவைப்படுகிறது. அப்பணத்தை துஷ்யந்திடம் கொள்ளயடிக்கிறார். அதன்பிறகு துஷ்யந்தனிடமிருந்து பறித்த ரு.2லட்சத்தை திருப்பிக் கொடுக்க அவரை தேடி வரும்போது துஷ்யந்தனை ஒரு கொலை குற்றத்திற்காக காவலர்கள் கைது செய்கிறார்கள். அந்த கொலைக் குற்றதிலிருந்து துஷ்யந்தனை காப்பாற்ற லியோ சிவகுமார் சபதமெடுக்கிறார். துஸ்யந்தன் யாரையும் கொலை செய்யவில்லை. அப்படியானால் உண்மையான கொலைகாரன் யார்? எதற்காக கொலை செய்தார்கள். என்பதுதான் மீதிக்கதை. லியோ சிவகுமார், தாயின் மீது பாசம் கொண்ட மகனாகவும், காதலனாகவும், எதிரிகளை எதிர்கொள்ளும் இளைஞராகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இரண்டாம் பாதியில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் அதிரடி நாயகனாக நடித்து கைத்தட்டலை பெறுகிறார். முதிர்ச்சிப் பெற்ற நடிகனாக திரையில் மிளிர்கிறார். இனி முதன்மை நட்சத்திர வானில் சிறகடிப்பார். துஷ்யந்த், ஆபத்தான சூழலில் சிக்கிக்கொள்ளும் சாதாரண மனிதனின் பயத்தையும் பதற்றத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். ராதிகா சரத்குமார் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். பிரிகிடா சகா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்து போகிறார், அதன் பின்பு படத்தில் காணாமல் போகிறார். போஸ் வெங்கட், காளி வெங்கட், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோரும் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர் கே.எஸ். சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை அதிரடி காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது.  தாயின் மீதான பாசத்தால் ஒரு இளைஞன் எடுக்கும் தவறான முடிவு, அதனால் மற்றொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு, பின்னர் அந்தத் தவறைச் சரிசெய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சி ஆகியவற்றை மையமாக வைத்து திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நானி. பெரிய குறைகள் இல்லாமல் முடிந்தவரை மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தை இயக்கியிருக்கும் நானியை பாராட்டவேண்டும்.