LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாட்டை உலுக்கிய நிர்மலா தேவி வழக்கு – திடீர் திருப்பம்!!

Share

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் நடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அத்துடன் இந்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ல் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுரத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது இந்த வழக்கானது நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை வருகிற 29ஆம் தேதிக்கு நீதிபதி பகவதி அம்மாள் ஒத்தி வைத்துள்ளார். தீர்ப்பை முன்னிட்டு நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகிய நிலையில் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. நேற்று மாலை முதல் நிர்மலா தேவி தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது உறுதி செய்யப்படாத நிலையில் வழக்கின் தீர்ப்பு உத்தரவிடப்பட்டுள்ளது.