LOADING

Type to search

இந்திய அரசியல்

“கோவை சிறையில் நான் கொல்லப்படலாம்” – கூச்சலிட்ட சவுக்கு சங்கர்!

Share

எனது கையை உடைத்தது கோவை சிறைச்சாலை கண்காணிப்பாளர் எனவும், கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் எனவும் சவுக்கு சங்கர் கூறினார்.

    பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசிய டி யூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு,  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் மீண்டும் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் மருத்துவர்கள் மாவு கட்டு போட பரிந்துரை செய்தனர். இதையடுத்து சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போடப்பட்டது. அங்கிருந்து வெளியே அழைத்து வரும் போது, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் தன் கையை உடைத்ததாகவும், கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி என மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு வைத்தார். பின்னர் காவல் துறையினர் சவுக்கு சங்கரை பாதுகாப்பாக மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர்.