LOADING

Type to search

இந்திய அரசியல்

குடும்ப பிரச்னை – 3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்ற தந்தை!

Share

போரூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக 3 வயது மகனை ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ள கொடூரம் நடைபெற்றுள்ளது.

    தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில் சிறுவனுடன் வந்து நின்ற நபர் ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிள் முன்பு அமர வைத்திருந்த சிறுவனை தூக்கி போரூர் ஏரியில் வீசிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார். இதனை அங்கு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர்கள் பார்த்துவிட்டு உடனடியாக ஏரியில் வீசப்பட்ட சிறுவனை நீரில் நீந்தி சென்று உயிருடன் மீட்டனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் போரூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். பொது மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அந்த சிறுவனை மீட்டு போரூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினரின் விசாரணையில் ஏரியில் குழந்தையை வீசிவிட்டு சென்றது தலைமை செயலக காலணியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் என்பது தெரிய வந்தது. தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை வீட்டில் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தனது 3 வயது மகன் கோபத்தில் தூக்கி வந்து போரூர் ஏரியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குடும்ப பிரச்னை காரணமாக பெற்ற மகனை ஏரியில் வீசிவிட்டு சென்ற தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.