93 வயதில் 5வது திருமணம் செய்த தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்
Share
தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (வயது 93). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், ரூபர்ட் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (வயது 67) திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்த திருமண நிகழ்வானது கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நடைபெற்றதாகவும் அதில் தெரிவித்திருந்தார். எலெனா ஜுகோவா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையே ஆன வயது வித்தியாசம் 25 வருடங்கள் ஆகும். இது இவருடைய 5வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.