LOADING

Type to search

இந்திய அரசியல்

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க டில்லி நீதிமன்றம் மறுப்பு

Share

டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்த ஜாமின் முடிந்து கடந்த 2-ம் தேதி திகார் சிறையில் சரணடைந்தார்.

இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால 7 நாட்கள் ஜாமின் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் அவரது நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.