LOADING

Type to search

இந்திய அரசியல்

குற்றாலத்தில் குளித்துவிட்டுத் திரும்பிய 3 பேர் விபத்தில் சாவு

Share

குற்றால அருவிகளில் குளித்துவிட்டு சென்னையை சேர்ந்த 9 நபர்கள் சொகுசு காரில் புளியங்குடி அடுத்துள்ள புன்னையாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆவடி பகுதியைச் சேர்ந்த ஹேமலதா (60) என்பவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த 8 பேரை அருகில் உள்ளவர்கள் மீது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே பிள்ளையார்குளம் அக்ரஹார பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் காளிமுத்து மகன் பாஸ்கரன் (வயது 33) விடுமுறையில் ஊருக்கு வந்த நிலையில் நண்பரான சேத்தூரில் குடியிருந்து வரும் கழுகுமலையைச் சேர்ந்த ராமராஜ் மகன் கிருஷ்ணராஜா (வயது 32), மைத்துனர் மாரிமுத்து ஆகியோர் ஒரு காரில் குற்றாலம் சென்று விட்டு திரும்பி வரும் வழியில் வாசுதேவநல்லூர் அருகே தனியார் பெண்கள் கல்லூரி அருகே உள்ள தென்னை மரத்தின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த ராணுவ வீரர் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் கிருஷ்ணராஜா ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

சேத்தூரை சேர்ந்த ராணுவ வீரரின் மைத்துனர் மாரிமுத்து (வயது 25) படுகாயம் அடைந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புளியங்குடி போலீசார் மாரிமுத்துவை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ராணுவ வீரர்‌ ஜம்மு – காஷ்மீரில் உள்ள லடாக் மற்றும் லேக் பகுதியில் வேலை செய்து வருகிறார். இரண்டு மாத விடுமுறையில் வந்த நிலையில் நாளை மறுதினம் பணிக்கு திரும்பிச் செல்லும் நிலையில் விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு மனைவி சீதாலட்சுமி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவி கதறி அழுதனர்.
தனியார் வங்கியில் வேலை பார்க்கும் கிருஷ்ணராஜா -க்கு மனைவி கனக லட்சுமி மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.