பீகாரில் 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்தன ஒரேநாளில் 4 பாலங்கள் சரிந்ததால் மக்கள் அதிர்ச்சி
Share
பீகார் மாநிலத்தில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது. இது கடந்த 15 நாள்களில் பீகாரில் இடிந்து விழுந்த 10வது பாலம் என்று அறியப்படுகிறது.
கடைசியாக நடந்த சம்பவம் சரண் மாவட்டத்தில் நேரிட்டுள்ளது. அதன்படி, பார்த்தால், சரண் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. உள்ளூர் நிர்வாகத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில்ஜூலை 3 ஒரே நாளில் 4 பாலங்கள் இடிந்து விபந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், மூன்று பாலங்கள் இடிந்து விழுந்த விவரம் மட்டுமே வெளியாகியிருந்தது. இந்த நிலையில்தான் நான்காவது பாலம் சரண் மாவட்டத்தில் இடிந்து விழுந்த விவரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
நான்கு பாலங்களில் ஒன்று 1982-83ஆம் ஆண்டிலும், மற்றொன்று 1998ஆம் ஆண்டிலும் கட்டப்பட்டதாகும்
கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாகவே பாலங்கள் பலமிழந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும், பாலங்களை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சீரமைக்கும் பணிகளை பீகார் அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே, பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வு தொடா்கதையாகியுள்ளது. தரமற்ற கட்டுமானம், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக அந்த மாநில பொதுப் பணித் துறை மீது மக்கள் குற்றம்சாட்டி வந்துள்ளனர்.
அவை மெய்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், பீகாரில் கடந்த 15 நாள்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. கடும் அதிர்ச்சி என்னவென்றால், புதன்கிழமை ஒரே நாளில் 4 இடங்களில் பாலங்கள் விழுந்தன என்பது தான் பரபரப்பாக பேசப்படுகிறது.