பில்கிஸ் பானு வழக்கில் இரு குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு
Share
2002 -ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்தது. 2022 ஆகஸ்ட் 15ல் அவர்களை குஜராத் அரசு விடுதலை செய்தது. குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 11 கைதிகளை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது. அந்த மனு நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த மனு எவ்வாறு விசாரணைக்கு உகந்தது என கூற முடியும்? இதில் எங்கு அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது? ஏன் அரசியலமைப்பு சட்டம் 32ன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளீர்கள்?” என கேள்வி எழுப்பினர். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.