LOADING

Type to search

சினிமா

விக்ரமின் தங்கலான் பட வெளியீடு தேதி அறிவிப்பு

Share

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “தங்கலான்.” மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தங்கலான் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறுத்து தற்பொழுது பதிவேற்றம் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூரவமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.