LOADING

Type to search

இந்திய அரசியல்

கெஜ்ரிவால் மருத்துவ உணவு ஆளுநர் கருத்துக்கு ஆம் ஆத்மி பதில்

Share

டில்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கதுறை டில்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. அதனைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும்போது சிபிஐ-யால் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சி செய்கிறது என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கெஜ்ரிவாலின் உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாகவும், பலமுறை இவ்வாறு நடந்ததாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இந்த நிலையில் டெல்லி மாநில துணை நிலை ஆளுநரான வி.கே. சக்சேனா கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து சிறைத்துறை கண்காளிப்பாளர் அறிக்கை அடிப்படையில் தலைமை செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அப்போது கெஜ்ரிவால் சிறைக்குள் வேண்டுமென்றே மருத்துவ உணவு மற்றும் மருந்துகளை தவிர்த்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ உணவு மற்றும் இன்சுலின் உள்ளிட்ட மருந்துகளை தவிர்த்திருக்கலாம். போதுமான அளவு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்பட்ட போதிலும், முதல்வர் கெஜ்ரிவால் உடல்நிலையை குறைக்க குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் அநத் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் உள்ள வேறுபாட்டை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிய துணை நிலை ஆளுநர் போதுமான கலோரி உணவை எடுக்காததன் காரணமாக கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஜூன் 2-ந்தேதியில் இருந்து 2 கிலோ எடை குறைந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். துணை நிலை ஆளுநர் சக்சேனாவின் குற்றச்சாட்டை திட்டவட்டாக மறுத்துள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் அதிஷி “முதல்வர் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 8 முறைக்கு மேல் 50 mg/dL-க்கு கீழ் வந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் கோமா நிலைக்குக் கூட செல்ல முடியும். பிரைன் ஸ்ட்ரோக் ஆபத்து கொண்டது.” என்றார்.