LOADING

Type to search

இந்திய அரசியல்

‘தமிழ் புதல்வன் திட்டதிற்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு

Share

தமிழ் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 360 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம், ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், முதற்கட்டமாக 3.28 லட்சம் மாணவர்கள் தமிழ்ப் புதல்வர் திட்டத்தில் பயன்பெறவுள்ள நிலையில், ரூ. 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். குறிப்பாக ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.