LOADING

Type to search

உலக அரசியல்

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்

Share

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலை ‘ஹென்லி கடப்பிதழ் இண்டெக்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் கடப்பிதழ் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் 2-வது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் கடப்பிதழ் மூலம் 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். தொடர்ந்து 3-வது இடத்தில் ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பெர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதையடுத்து 4-வது இடத்தில் பிரிட்டன், நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் உள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்கா 8-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் கடப்பிதழ் மூலம் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த கடப்பிதழ் தரவரிசை பட்டியலில் இந்தியா 82-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் கடப்பிதழ் மூலம் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், இந்த பட்டியலின் 100-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.