LOADING

Type to search

உலக அரசியல்

பைடன் பேச்சு குறித்து டிரம்ப் கருத்து

Share

”அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேச்சு புரிந்து கொள்ள முடியவில்லை. மோசமாக இருந்தது” என முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‛‛இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதே சிறந்தது என நான் முடிவு செய்தேன். நமது தேசத்தை ஒன்றிணைக்க இதுவே சிறந்த தருணம். அமெரிக்காவை மன்னர்கள், சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தது இல்லை. மக்கள் தான் ஆட்சி புரிந்தனர்”. இவ்வாறு அவர் பேசினார். இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிபர் அலுவலகத்தில் இருந்து ஜோ பைடன் ஆற்றிய உரையானது அரிதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் மோசம். ஜோ பைடன் மற்றும் பொய் சொல்லும் கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்காவிற்கு தர்மசங்கடமானவர்கள். இது போன்று காலம் எப்போதும் இருந்தது இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.