LOADING

Type to search

உலக அரசியல்

ரஷ்யா ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – விமானி பலி

Share

ரஷியாவின் தென்மேற்கே கலுகா பகுதியில் மி-28 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. உக்ரைன் எல்லையையொட்டி 93 மைல்கள் தொலைவில் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி, ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விமானி பலியானார். இதனை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்து உள்ளது. இதுபற்றி நடந்த முதல்கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பேரிடர் ஏற்பட்டு உள்ளது என அதுபற்றி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.